Friday, 1 September 2017

சிந்திய மூலையில் ஊமத்தை புதுசா பூத்தது.



சிந்திய மூலையில் மூன்று
நட்சத்திரங்கள் பொறுக்கினேன்
முதலது போர்களின் ஆட்டங்களில்
காத்துப் பஞ்சத்தில் சிக்கியது
அடுத்தது எழுதினால் தெரிந்து
விடுமென்று அச்சத்தில் அழன்றது
இடையது என்றுமே கூட்டத்திலேயே
கண்சிமிட்டியது ஏதென்று புரியாத
இக்கணம் வெண் ஊமத்தை புதுசா பூத்தது.

கை மீதே காதல்



மூன்று கால்கள் பிரித்தேன்
இரண்டு எப்பவுமே சமம்
அந்த ஒன்று தான் சின்னதானது
தினமும் நான் சுமக்கிறேன்
தலைக்கு என்றுமே
அம்மாவின் கை மீதே காதல்
பிண்ணல் வரவே மாட்டேங்குது.

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...