Tuesday, 25 July 2017

வளத்தது விருப்பத் தேர்வு



புளிய மர பூக்களுக்குள் கீழ்
குப்பை கீரையின் மூட்டம்
அது இடையில் கோழி கீரையும்
நான் சொல்வதில் சிங்கம் வந்தது
வளத்தது விருப்பத் தேர்வு
இரண்டு அரிவைகள்
மூன்று சிரிப்புகள்
திருப்பிச் சொல்ல வேண்டும்
பூனைக்கெல்லாம் எலி பிடிக்க
தெரிய மாட்டிங்குது
ஒரு ஆடு மீன் கறி விரும்பிய வாலாக இருக்கு
கேட்கும் தருணத்தில் நினைவில்லையாம்
கூற வந்த வளத்ததுக்குத்
தற்காலிக பல் மட்டும் காணல
காணாதத தேடினால்
சிங்கம் வருமாம்.

Monday, 10 July 2017

இறங்க மறுக்கிறது உயிரிசை



உழவன் யாத்த இட வெளியில்
கவலை மாண்டதென்று
விலகி நடக்கையில் பசையுடைய
இலைகளுக்கு இடையில்
இதழ் விரிப்பில்லாது
எங்கும் நீக்கமற நிறைந்து
குழுங்கி பூத்த ஊதா நிற
கரந்தை மீது
ஏறிக்கொண்டு
இறங்க மறுக்கிறது உயிரிசை
இது திக்கில்லாத திசை.

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...