Saturday, 25 April 2020

நெடியாகும் மதியக் காடு

இதுபடாமல் துண்டித்த அமைவு
உச்சியில் இருந்து வழியும் காலம்
இருந்த கடைசி இலையும் நுனி
நொருங்கி நெடியாகும் மதியக் காடு


எங்கும்

உப்பு பூ பூத்து நிறைந்த மரம்
மறந்து புத்தகம் தங்கிய பறவைக்கு 

சொல்லிடையிலோ வரியிடையிலோ
தேங்கிய பொருள் போன்ற நினைவு
எங்கேனும் சிலிர்விட வேண்டும்


இங்கும்

முடக்கிய அவ்வளவும் மொழி
புடுங்கலால் சரிசெய்ய இயலாததால்
நகருகிறது நிலம் தட்டித்தட்டி உருவம்
உறைந்த சொல்லுள் சொட்டலாகவே.


வினோத வணக்கம்

மீன் ஓட்டை

இயக்கக்கல் வரிசை நேற்றையைகளில்
ஒருவாறு நிலை கொள்ள
காணா நடை பழகுகிறது விரைசொல்


கனவு

வினைகளின் விளைவில் பக்கம்
தடவிட முறையாக்கும் முடிவு
தங்கிய நிழல் உரசிவிட்ட நிறமாகலாம்
வேறாகும் சாம்பல் திரித்த நூல்
பெருக்கமிடை முகமுமாகலாம்


நினைவு

தேடா நீரில் வெளிற பதித்த
அடையாள அசைவு யாவும்
தீர்ந்து தரைநீந்தும் மீன் ஓட்டை
உலகம் புகுந்து படிக்குமோ.



வினோத வணக்கம்.

மீன்முள்ளி

ஊருயிர் பெயரல் நிறை மையல்
திரிகால செலவு யாவும் வெஞ்சூடு
தேங்கிய நுனி பொசுக்கும் விரல்களில்

தலைத்துகள் காய்புல் கால் வரப்பு
நாளும் குத்தி வாய்க்கால் கடந்த
முன்நாள் இணர் மீன்முள்ளி
எதிரல் நொச்சி தெரிவுகளில்

நுண்புள்ளி உளர் உதிரல் வரைவு
நெளிவாகா கண்ணாடி நீர்க்குமிழி
தெரியொளி திசைவீ ஊடுருவல்
தினம் வளர் நினைவினால் கட்டிய
காடு ஒன்றும் அமை சத்தமின்மைகளில்.


வினோத வணக்கம்
Jawahar

நீலநீர் முட்டை பூ

வான் நிறங்களால் வரிசையிட
நீலநீர் முட்டை பூ தேங்கும்
இளகிய பொழுது முழுவதும்
துண்டுகளான நிலம் அங்கொன்றும் 

இங்கொன்றுமாக மின்னித் திரிந்திட
கண் உருட்டும் குருவி தனியத்தில்
கொத்தும் புத்தகக்காடு எங்கும்
மலர்ந்துள்ள மொழிப் பூக்கள்
நடுவில் இடம்துய்த்து வாழவே
குறுவியின் சின்னிறகு நிதம் உதிர்கிறது
இதற்குள் என்னேரமும் பெய்திடும்
படர்க்கை இருளுக்கு மத்தியில்
தொங்கும் நிலவு
கீற்று இடுக்கு வழியே ஒழுகி
ஊத்திவிட்டாலும் விடும்.


வினோத வணக்கம்

பூச்சித்துவம்

பூச்சித்துவம் காது கடித்துத் துப்ப
பெயல் நீர் பசுமண் குடம் கசியும்
உவமைக்குள் மாட்டிய சொல்லை
அழுத்திய போது பிதுங்கிய பொருள்

 போன்றதொரு வேனிற் காலம்
கடந்து உச்சிக்குத்த புதை வரிகள்
அடுக்கிய புத்தக உள்ளிறுக்கத்தில்
இப்படித்தான் புரியவிடாமல் குழப்ப
தலைவி தலைவன் நிகழ் கூற்று
இலங்கு அருவி நீர் கானலால் கரைகிறது.


வினோத வணக்கம்

தலைதிரள் நார்க்கூடு

புள்ளியாய் சிந்தும் வேப்பம் பூ
தரைக் கவ்வி குப்புற கிடக்க
நெடு மூங்கில் குத்திலிருந்து
பிரிந்து தனியாடலுக்கு இடையிலும்
தலைதிரள் நார்க்கூடு வான் அவாவிட

படிய வைத்த பொருள் புழுதியானாலும்
வெல்வதற்கு வந்தது பூச்சி பெரும்போர் 
வாளெடுக்க போன முன்னிலை
நீள் மூக்குகள் பொத்த கற்றிருக்க

உம் நிரப்பிய உரையல் எதுவானாலும்
வெப்ப சித்திரையும் வெளிச்ச
நிலாவும் தென்கீற்றும் குவிபுலனச்
செய்தியென முனுமுனுக்கிறது.


வினோத வணக்கம்

திசைவளர் பழங்கல் முடிவுகள்

நீர் மூட்டமிட்டதால் கிளம்பிய புகை
போர்த்திய திசைவளர் பழங்கல் முடிவுகள்
செய் கல்லடிக்கிய கட்டத்தினுள்
தேங்கும் நிழல் போன்று
ஓர கூரெயிர் நினைவொளி படர்திருக்க

எதிலும்
இமை உலர்த்தி விசிறும் இருளை
அள்ளி வந்திரங்கும் மாலை கால்
கடுக்க வாயில் முன் நின்றிருக்கிறது

எனினும்அலட்டா திரை எதையாவது 
காட்ட விசைப்பொத்தான் தடவி எழும்பும்
சின்னிசை மட்டும் போதுமோ.


வினோத வணக்கம்.

நேர சாயல்

நேர சாயல் அடுகளம் நோக்க
எங்கேயும் ஏங்கும் வேனில் ஒண்பூ
காட்டும் வெளிச்சம் தொடர்ந்திட
அரிகரையானும் புதுப்பாச்சையும் புக
அசை அட்டை சூழ் அறைக்குள்
காதற் பரத்தையும் காமக்கிளத்தியும்
எதுக்கும் எதுவும் உவமை ஆகலாம்

தூரம் உறைந்த கேள்விக்குள்
முட்டையான எழுத்துகள் கதப்பில்
பெரு வாழ்வு தேடி பக்கம் உரசிட
தூரவெளி மென்துகள் உடைத்து
ஆதிநீண்ட பேச்சு அநேகமாக
நீள்கோள உருவேற்று சுற்றித்திரியலாம்

தொன்மம் சாத்திய வரலாறெங்கும்
அடைக்காக்கும் மையேறிய கருங்கல்
குட்டிகள் உள்ளங்கை குவி குழிநீர்
குடித்து மிச்சத்தில் தேங்காத
கனவில் நிழல் தடவியே சிறகிடும்.


வினோத வணக்கம்.
துருவேறும் சூரிய நிழல்
தொங்கல் சாய்வென நீர்த்து
கானல் வெம்பொழுது பூச்சி வாய்
புகுந்த பெரும் பேச்சுக்கிடையில்
வெள்ளை ஆகுகிறது
பெரு மழை வந்ததென தகர
காத்தாடிக்கு வளை விட்டு
வெளிவரும் அலவனென சின்னிமை
நீக்கி எட்டிய கருவிழி ஒதுங்கல்
இதத்தில் இருந்ததொரு செம்பொழுது
சற்றுக்கு ஒருமுறை வெற்று வானம்
காற்றில் கரைகிறது அதனின் அதுவாக.

வினோத வணக்கம்.

நீர்க்குவளை வளைவில்

நழுவும் சொல் சுருக்கென்று
சில்போது சுரமாகிட தொலைவின்
நீட்சிக்குள் புத்தகக்காடு வெப்பப்
பக்கங்களை உதிர்க்க அவ்வப்பொழுது 

சொல்லும் பொருளும் ஒன்றின் மீது
விழுந்ததால் அழுத்தம் தாங்கா மொழி
திடமாகி சித்தெறும்பு புள்ளியாய் நோக்கும்

எதிர்முக பெயரல்
முன்பெல்லாம் முன்னிலை வேறாகிய
கவன பேச்சிக்கிடையிலும் பச்சை பூசிய
நீர்க்குவளை வளைவில் நின்று 

நகரும் வருடலும் அடிதங்கிய நீரும்
குறுக்கால பாதை செய்ய இன்றும்
நடுபக்க போர் தலையிலிருந்து
வழிவது நில்லாமல் நீள்கிறது.


வினோத வணக்கம்

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...