தனிமையின்
நூறு ஆண்டுகள் (நாவல் அறிமுகம்)
காப்பிரிய
கார்சியா மார்க்கேஸ் எழுதிய ஸ்பானிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல் தனிமையின் நூறு
ஆண்டுகள் எனும் நாவல் ஆகும். காலச்சுவடின் வெளியீடாக வந்த இதனை ஞாலன் சுப்பிரமணியன்,
சுகுமாறன் இருவரும் சேர்ந்து மொழிப்பெயர்த்துள்ளனர். கனவுலகிற்குள் வாழ்வது போன்ற உணர்வினை
அளிக்கும் இந்நாவல் மாய எதார்த்தத்த நாவலாக அனைவராலும் ஏற்கப்படுகிறது. எழுத்தில்,
கதையில், மொழியில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்ற இந்நாவலானது இருபதாம் நூற்றாண்டில் அனைவராலும் கொண்டாப்பட்ட
நாவலாகும். 37 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. எனவே1967 ல் எழுதிய இந்நாவலுக்கு 1982 ல் நோபல் பரிசு கிடைத்தத்து.
நாவலில்
தனிமை என்பது மையப் பொருளாக அமைகிறது.
ஒரு நகரத்தின் தனிமை, ஒரு மாளிகையின் தனிமை, கதைமாந்தர்களின் தனிமை விரித்து பொருள் காணுவதற்குத் தோதாகக் கதைக்களம்
அமைகிறது. கற்பனை நகரமான மகோந்தா இதனை உருவாக்கியவர் ஸோசே அர்க்காதியா யுயேந்தியா என்று தொடங்கும் இந்நாவல் ஒருவிதமான மயக்கத்தைத்
தருவதாகவே நகர்கிறது. மகோந்தாவானது சதுப்பு
நகரம், இன்னும் இறப்பே இல்லாத நகரம், முழுக்க இயற்கைச்சார்ந்த வாழ்வுமுறை என்று தொடங்கி
பின் வாரிசுகள் வருகைக்குப்பின் பொய், போர், முறையற்ற புணர்ச்சி, கொள்ளை நோய், வரட்சி
போன்ற காரணங்களால் அழிகிறது.
இதனைப்
பின்தொடர்வதற்கு இலத்தின் அமெரிக்க புரிதலோடு தான் அணுக வேண்டியுள்ளது. ரஸவாத பின்னணி,
தங்க மீன், இரயில் வருகை வாழைப்பழக்குழுமம்,
உறக்கமின்மை நோய், மறதி நோய், பன்றி வாழ் குழந்தை (கிறித்துவ நம்மிக்கைத்தொடர்பாக வழங்கும்
கதை) போன்றவைகள் குறியீடுகளாக இலத்தின் அமெரிக்க வரலாற்றினை உட்கொண்டுள்ளது. நாவலின்
ஊடே பழங்குடிகளின் அழிப்பு, மொழியழிப்பு, ரோமன் கத்தோலிக்க ஆதிக்கம் போன்றவைகளால் சீரழிவுகளால்
அழிவுப்பாதை நோக்கியதைக் குறிக்கிறது.
கதை
ஸோசே அர்க்காதியா யுயேந்தியா
மனைவி உர்சுலாவுடன் ஒரு புதிய நகரத்தை
உருவாக்குகிறார். இங்கு இயற்கை மனிதன் விவசாயம் என்று வாழ்வு முதலில் இருக்கிறது. அர்காதியாவிற்கு வெளியுலக தொடர்பில் விருப்பம் இருக்கிறது.
ஆனால் உர்சுலா எப்பொழுதுமே கணவனின் செயல்பாடுகளில் முரண்பட்டே செயல்படுபவளாக இருக்கிறாள்.
பிறகு ஹோசே ஆர்காதியா யுயேந்தியா, ஹோசே அர்க்காதியா என்ற இரு மகன்களும் அமரந்தா எனும் மகளும் என வாசிசுகள் உருவாகின்றனர். இப்பெயரிலினான கதைமாந்தர்களே ஏழு தலைமுறைகளாகவும் திரும்ப திரும்பவருகின்றனர்.
எனவே நாவல் முழுவதும் யுயேந்தியா, அர்காதியா, அவுரேலியா, அமரந்தா எனும் பெயர்களே அதிகமாக
வருகிறன்றன. முந்தைய தலைமுறையின் செயல்களை ஏற்ற செயல்பாடுகளும் கால மயக்கமும் புரிந்துக்கொள்ள
சற்று கடினமானதாக உள்ளது. இருப்பினும் அமைதியான மகோந்தா நகரம் வாரிசுகளின் காதல், உச்சமான
காதல், முறையற்ற காதல், வெளியுலகத்தொடர்பு, போர், போன்ற செயல்பாடுகளால் குடும்பமும்
நகரமும் அழிவதை சித்தரிக்கும் வகையில் கதைச்செல்கிறது. இறுதியாக ஒரு தனியறையில் குடும்பத்தின்
கடைசி அவுரேனியா தன் பிறப்பு, குடும்ப ரகஸியம் அனைத்தையும் அறிந்தவுடன் அந்த அறையில்
அவன் படித்தது தான் அவனின் கடைசிநிமிடம் என தெரிந்தவுடன் மரணமும் நாவலின் முடியும்
நமக்குக் கிடைக்கிறது. அவுரேனியா, உர்சுலா அமரந்தா இருவரின் முரட்டுத்தனமான உச்சமான
காதல் வாழ்க்கையின் முடிவாகக் குடும்பத்தின்
கடைசி வாரிசு பன்றி வாலுடன் பிறந்ததும் வம்சமும் நகரமும் அழிகிறது. இடையில் இறந்துபோனவர்களுடன் வாழ்தல்
, கடும் போரினைச் சமையல் பாத்திரங்களால் செய்து வெற்றி பெறல் போன்ற சில நம்ப முரியாத கதை நிகழ்வுகள் போன்றவைகள் ஒரு
கனவுலகத்தைக் கண்முன் காட்டுவதாக உள்ளது.
ஒரு
தனிமனிதன், ஒரு நகரத்தின் தனிமையென வருணிக்கப்படும் இந்நாவல் மொழி, இனம், மதம், நாடென
அனைத்திற்கும் பொருந்துவதாக இருப்பதால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நாவல் அமைந்துள்ளது. அனைத்து வரலாறுகளிலும் தொல்குடிகள் அழிப்பு, மிரளவைக்கும்
இயற்கை இடர்பாடுகள், கொள்ளை நோய்கள், போர்கள் இவைகள் இருக்கும் இதனைப் பொதுமைப்படுத்தி
வாசிக்கும் பொழுது அனைவருக்கும் பொதுவான ஒரு கதையாக இதைக்கொள்ள முடியும். அனைத்து வரலாற்றெழுதியலும்
தொடரும் திரும்ப திரும்ப வரும் ஆண்டவர்களின் பெயர் மயக்கத்தைக் (குழப்பத்தை) குறிப்பதாக
கொள்ளலாம். சான்றாக நம் வரலாற்றிலும் சேர, சோழ , பாண்டியர்களின் பெயர்கள் அத்தகையவையே.
அழிவும், ஆக்கமும் இவர்களைச்சார்ந்தே இருந்ததைக் குறிப்பிடமுடியும். இக்கூறுகளை அனைத்து
வரலாறுகளிலும் காணமுடியும். இம்மாதிரியானவை ஒவ்வொரு காலத்திலும் சிறு மாறுதல்களுடன் நிகழ்வதைக் காணமுடியும். கி.பி.1492 கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுப்பிடித்தார் என்பதுடன் இந்தக்
கண்டுப்பிடிப்புப் பல பூர்வக்குடிகளின் அழிவுக்குக் காரணமாக அமைந்தது என்பதையும் மையமிட்ட
ஒன்றாக இந்த நாவலைக் காணமுடியும். தேடி அலையும் வரலாற்றைத் தேடுபவனாக ஒவ்வொருத் தலைமுறையிலும்
ஒருவன் இருக்கிறான் என்பதும் பெண்களின் விடாப்பிடியான சில நடவடிக்கைகளும் மேற்கூறியதோடுத்
தொடர்புடையது ஆகும். தன் மொழியே அவுரேனியா மிகுந்த தேடுதலுடன் படிப்பது போன்றன்வைகள்
இலத்தின் அமெரிக்க பகுதிகளில் அழிந்த இலத்தின் போன்ற புராதன மொழித்தேடலாக எண்ணத்தோன்றுகிறது.