Friday, 9 February 2018

2018 ஜனவரி புதுப்புனல் இதழில் வெளிவந்த மதிப்புரைகள்



தந்திர வாக்கியம் (நாவல் அறிமுகம்)
வரலாற்றுக்கும் புனைவிற்முள்ள இடைவெளியைக் குறைக்கும் புனைவு வடிவம்
தமிழில் பின்நவீனத்துவம் சிந்தனை, எழுத்துமுறை உருவானதில் முதன்மையாகச் செயல்பட்டவர்களுள் எம்.ஜி.சுரேஷ் முக்கியமானவர். சிற்றிதழ் இயக்கத்திலும் தன்னைத் தொடர்ந்து இணைத்துக்கொண்டவர். சிலந்தி, அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேனிரும், அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் போன்ற நாவல்ககளையும் பின்நவீனத்துவம் என்றால் என்ன, இசங்கள் ஆயிரம் போன்ற கோட்பாட்டு  நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அனைத்து விதமான சிந்தனைகளையும் உள்வாங்கிக் கொண்டவர்களில் ஒருவரான இவர் பின்நவீனத்துவம் சார்ந்து சிந்திப்பதில் வல்லவர் என்பதை இவரின் படைப்புகள் வழி உணரலாம். இந்த வகையில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த  ‘தந்திர வாக்கியம்’(கிழிளிக்‌ஷிணிலி ளிதி திஸிகிநிவிணிழிஜிஷி) - (A NOVEL OF FRAGMENTS) என்ற நாவல் முக்கியமான நாவல்களில் ஒன்றாகும்.
நாவல் வடிவமும் உள்ளடக்கமும்
         இந்தியாவில் நடந்த போராட்டங்கள் அனைத்திலும் இருமை எதிர்வு கலந்துள்ளது. புத்தரின் சிந்தனையும் இதனை ஒத்ததாக இருந்திருக்கிறது. இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை இருமை எதிர்வு ஆட்டிப்படைத்திருக்கிறது. எனவே இதனை அடியாகக் கொண்டு இரண்டு கதைகள் கொண்ட நாவலை உருவாக்கியதாக  நாவல் ஆசிரியர் கூறுகிறார். இதுக்கூட களப்பிரர் காலம் பற்றியான வரலாற்றையும் புனைவின் வாயிலாக சாத்தியமாக்கும் வகையில் கதையோடு இணைகிறது.  “இதுவரை  வேள்விக்குடிச் செப்பேடு, யாப்பருங்கலக்காரிகை, பதிற்றுப்பத்து ஆகியவற்றின் மூலமாக துண்டு துண்டான விவரங்களாகவே கிடைக்கும் களப்பிரர் வரலாற்றை நேர்கோட்டில் எழுத முடியாது என்பதால் இந்த நாவலையும் துண்டாடப்பட்ட விவரணையாக மாற்றித் தாவிச்செல்லும் உத்தியில் செல்கிறது (fragmented narrative) ” என்கிறார்.
          ஆசிரியரின் சிந்தனையின் படியே நாவல் 98 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இரு கதைகளும் கவனமுடன் தொடர்ச்சியாக பின்னப்பட்டுள்ளன. வரலாறு கூறும் கதையில் வரும் கடிதங்கள் முதலில் வரிசையாகயாக வருகிறது பிறகு இடையில் ஒன்று இரண்டு குறைந்து வருகிறது. பிறகு இடைவெளி அதிகமாகிறது பிறகு இன்னும் குறைந்து தொகுத்து தருவதாக இருப்பது தவிச்செல்லும் உத்திக்குப் பொருத்ததைத் தருகிறது. இது மேலும் வரலாறும் ஒருவகையான புனைவு என்பதனை நினைவூதாக இந்த வடிவமைப்பைக் கருதலாம். எனவே இது வழக்கமான நாவல்களில் இருந்து தனித்து இருக்கிறது. இரு கதைகளின் பின்னலாக இருந்தபோதிலும் எது இக்கதை எது அக்கதை என்று குழப்பம் இல்லாமல் வாசிக்கும் வகையில் உள்ளது. பெரிய நாவலாக இல்லாமல் 225 பக்கங்களில் வரலாறு கலந்து சுவையாகக்  கோர்க்க முடியும் என்பதில் வெற்றிக் கண்டுள்ளது.
நாவல் பழமையும் புதுமையும் கலந்த இருமை எதிர் நிலையில் எளிய நடையில் அமைகிறது. இதுவரை மறைக்கப்பட்ட (இருண்ட கால) வரலாற்றை மையமிட்டதாக கதை நகர்கிறது. நவீன வாழ்க்கையுடன் பழைய வரலாற்றைக்  கொண்டுச் செல்லும் வகையில் உள்ளது.  ஒரு சாதாரண வாழ்க்கை இதில் கலக்கும் அறிவியல் இதனுடன் கூடிய பிரச்சினைகள், அரசியல், அதிகாரம், வரலாற்றுணர்வு இவைகளுடனான ஒரு பிணைப்பினை நாவலை வாசிக்கும் பொழுது உணரலாம்.

மையமாவவர்கள்
        இருண்ட காலம், கணினி காலம் இடையில் உள்ள  புரிதலைக்கொண்ட இந்த நாவலில் குறைந்த கதைமாந்தர்களே வருகின்றனர். முக்கிய காதாப்பாத்திரமாக கணினி கால நிகண்டனும், இருண்ட கால நிகந்தனும் வருகிறார்கள். குணத்திலுல் செயலிலும் ஒத்து போகக் கூடியவர்களாக உள்ளனர். இதுபோக நிகண்டனின் அப்பா (திரமிளன்) அம்மா (இருளாயி) காதலி, நண்பர்கள் என்று பலர் உள்ளனர். மற்றொரு வரலாற்றுக்கதையில் சீனபௌத்த பிக்குவான ஹுவாகுவா ஜாங்ஜின், இவரின் நண்பனான லுவேஜியா, காதலி, வழிப்பயணத்தில் சந்தித்தவர்கள் என பலர் உள்ளனர்.
மையம்
        தீவிர தமிழ்ப்பற்றும், வரலாற்றுப்பற்றும் உடையவரான திரமிளன் தன் மகனுக்கு நிகண்டன் என்று பெயர் வைக்கிறார். மகன் திறமையான  மென்பொருள் துறையில் (IT) வல்லுனாக வளர்கிறான். சிங்கப்பூரில் வேலையில் சேர்கிறான். இவனின் முற்போக்கான  சிந்தனையின் பயனாகப் பெரிய கண்டுபிடிப்புகளையெல்லாம் நிகழ்த்துகிறான். அத்துறையில் அவனால் அதிகாரமற்ற சோசலிச சிந்தனையைக்கொண்ட ஒரு நிறுவனத்தை அமெரிக்காவிலும் நடத்த முடிகிறது. இதற்கு அடித்தளமாக சிங்கப்பூர் நூலகத்தில் கிடக்கும் இந்திய வரலாறு பற்றி கி.பி.3 நூற்றாண்டில் எழுதிய நூலின் ஆங்கில மொழிப்பெயர்பு அமைகிறது. ஜாங் எழுதிய கடிதங்களின் வாயிலாகச் சில விளக்கங்களையும், வரலாற்றுப்புரிதல்களையும் புரிந்து சிறந்த சிந்தனைக் கொண்ட மனிதனாகக் செயலாற்றுவதாகக் கதை அமைகிறது. இடையில் தகவல் தொழில் நுட்பத்துறையில் (IT)இருக்கும் இடர்பாடுகள், நம்பகமற்றத்தன்மை, காதல், பேராசை, நிலையாமை போன்றவைகளும் கலக்கின்றன. இதனுடன் வரலாற்றுத்தேடலில் மிகுந்த இடைவெளிக்கொண்ட இருண்ட காலத்திற்கு ஒரு புதிய விளக்கம் தரும் வகையில் உள்ளது.  ‘தந்திரம்’ ,  ‘மந்திரம்’ எனும் இருச்சொற்களைத் தேடி நகரும் கதையானது புத்தரின் சார்பில்லாத  ‘மத்திமம்’ தான் தீர்வு என கதை தீர்வாகிறது.
அதிகாரம் , புகழ், மேன்மை போன்ற மாயைகளால் உருவாக்கப்படும் ஒரு இல்லாத அதாவது மந்திர தனமானவற்றிலிருந்து மக்களை விடுவிப்பது தருணங்கள் தான் அதாவது தந்திரம்.  இக்கதையில் வரும் நிகண்டன்  தந்திர வழியில் சிந்திக்கும் போக்கினை அவன் வரலாற்றினால் பெறுகிறான். இதனால் நிகண்டன் அவன் துறையில் இருக்கும் இருமை நிலையைக் களைவதற்கான வழியை அவனுக்கு வரலாற்று கற்றுத் தருகிறது. இதற்கான அடிப்படையைக் குடும்பமும், சமூகமும் அவனுக்கு அமைத்துத் தருகிறது.
மந்திர வாக்கியம்
          நிகண்டனின் கதை நடைமுறையைக் கண்முன் தெரிவிப்பவையாக இருக்கிறது. நாவலின் முக்கிய பயணம் வரலாற்றில் புத்தரின் சிந்தை எவ்வகையில் மேன்மையானது என்பதை விளக்குவதாக உள்ளது. ஜாங் பயணம் சீனாவிலிருந்து இந்து நாடு தேடி முடிகிறது. புத்த துறவியான ஹூவாகுவாங் ஜாங் கி.பி.265 ஆன் ஆண்டுகளில்  சீனவில் வாழ்ந்துள்ளார். புத்த மத இலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தெளிந்துள்ளார். பிறகு  ‘மந்திர வாக்கியம்’ என்ற கலைச்சொல்லைத்தேடி இந்தியா வந்துள்ளார். இந்தியாவுக்கு வந்த முதல் சீனப்பயனி இவர் ஆவர். பாஹியானுக்கு முன்னோடியாக இருந்துள்ளார்.  இவர்  வழியில் கண்ட நாடுகள், வருணைகள் வாயிலாக நாவல் ஆசிரியரின் அறிவுவெளி வெளிப்படுகிறது. பல்வேறு நாடுகள், காலம், சூழல் இவைகளை அறிந்து எழுதியிருப்பது வியக்கத்தக்கது.
நிரப்பட்ட வரலாறு
          ஜாங் தனது பயணத்தின் பொழுது எழுதிய 50 கடிகங்களின் வாயிலாக இருண்ட காலத்தைப் பற்றியயான ஒரு புது விளக்கத்தைப் பெற முடிகிறது. இந்த நாவலிலும் விட்டுவிட்டு செய்த மொழிப்பெயர்பின் வாயிலாக  துண்டுத்துண்டான வரலாற்றுப்பதிவையே (fragmented narrative) திரும்பவும் நினைவூட்டுகிறது. எனினும் நாவல் ஆசிரியர் தேடல் நாவலின் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள பார்வை நூல்களின் வாயிலாக இது வெறும் புனைவல்ல ஆராய்ச்சிக்கு  உரியது என்று தெளியலாம்.
சில தகவல்கள் மட்டும் சுருக்கமாக
முதலில் அசோகனின் மகனின் நாடான குஸ்தானன் பற்றியும், மரணத்தை இன்பமாகக் கருதும் போலார் இன மக்கள் பற்றியும், காந்தாரம் பற்றியும், கபிலவஸ்து, காமரூபம், கலிங்கம், சதவானம் போன்றவைகளைப்பற்றி அறிய முடிகிறது. வடக்கில் மோசமான சாதியமும், சதி, போன்றனைகள் இருந்தாகவும் பதிவிட்டுள்ளார். பின்பு மந்திர தந்திர வாக்கியங்களுக்கான  பொருளை மதுரைக்கு வந்து ஜான் அறிகிறார் என்பதன் வாயிலாக விவாதங்கள் தோற்காமல் தமிழகத்தில் நிலவி பெரிய மாற்றத்துடன் தமிழகம் திகழ்ந்தை அறிய முடிகிறது. இதுவரை வேறொருவர் வந்து தமிழகத்தை ஆண்டனர் என்ற நிலை மாறி இங்கேய சமணம், பௌத்தர்களால் புரட்சி ஏற்பட்டு அதன் வாயிலாக நிகண்டன் மக்கள் ஆட்சியை மேற்கொண்டான் என்பது நிரப்பட்ட வரலாறு. மன்னன் என்பவன் மக்களின் சேவகன்  என்பதையும் தருணங்கள் தான் அனைத்தையும் தீர்மாணிக்க வல்லது என்பதைத் தந்திரமாக கொண்டு பின் நவீனத்துவ சார்ந்த சிந்தனைக்குப் பௌத்தமே அடிநாதம் என்பதன் அடியில் பிறந்த நாவல்  ‘தந்திர வாக்கியம்’ ஆகும்.
திரமிளச்சங்கம் என்பது ஒரு மாதிரியாகச் செயல்பட்டு புனைவினால் வரலாற்றை மீளாய்வு செய்யும் நோக்கில் நாவல் அமைந்துள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாற்றைத் தரவுகளின் அடிப்படையில் மீள்கட்டமைப்பு செய்யும் வகையில் இருக்கிறது. அனைத்து வரலாற்றிலும் அதிகாரத்தின் உச்சத்தையும் வீழ்ச்சியையும் 2500 ஆண்டுகால இடைவெளியை நிரப்பி உள்ளது. புனைவில் ஆய்வையும் ஆய்வில் புனைவையும் சாத்தியமாக்கி இருக்கிறது. அந்த வகையில் நேர்க்கோட்டு தன்மையற்ற பின்நவீனத்துவ  நாவல் என்று இதைக் கூறமுடியும். தமிழில் வரலாற்றுப் புனைவுகள் என்ற எழுத்துகள்  வரலாற்றை திரிப்பதாகவோ வெறும் புனைவிற்குள் கட்டியெழுப்புவதாகவோதான் பெருபாலும் ஆயிருக்கின்றன. ஆனால் சிதறிய வரலாற்றுத் தரவுகளின் அடிப்படையில் வரலாற்றைப் புனைவினால் இட்டு நிரப்பி கலைத்தன்மையாக்கியுள்ளது இந்நாவல். வரலாற்றிற்கும் புனைவிற்குமுள்ள இடைவெளியை குறைத்துள்ளது. வரலாறும் புனைவும் வரலாற்றில் இப்படியாகக் கலந்து இயங்குகிறது என்பதை முன்வைக்கிறது. அந்த வகையில் தனித்துவமான நாவலென்று இதைக்கூறமுடியும்.


No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...