Monday, 2 July 2018

வானமெல்லாம் வெயில் செய்கின்றன


ஓர்யான் துஞ்சாது விடுகையில் பதினைந்தாம்
நாழிகையை இறுதிக் கொண்ட இடையிரவு
நீட்டான கானல் கனவில்
பிசிரும் நீர்த்துளியால் நிலம்
விம்மி புடைத்து மேலெழும்பி முட்டி
குவிமுகிழ் எருக்கென
துளை காட்டி நிற்கும் நேரம்
மழை பெய்யா நின்றது
இதெழுத  முண்டாசு கவிஞனின்
மூக்கின்மீது வைத்து  தீட்ட
எடுத்த கோல் அதன் தொழில் மறந்து
விழிப்பில் இது காரல்ல ஏனெனில்
வானமெல்லாம் வெயில் செய்கின்றன.

முட்டையிட்ட குட்டி


விட்டுச் சென்ற முட்டை யொன்று
குட்டி போட்டுப் போனதிசை
நோக்கி நிமிர்ந்து நிற்கிறது
காடு கொன்று நாடு கொன்று
திரியும் நாழியில் தாகமெடுத்து
தத்தளிக்கும் தண்ணீர் கனவுடன்
நீர் உடுத்துபவள்
ஆடையுரித்து கிடக்கிறாள்
அஞ்சி அதியா
உன்னூரிலிருந்து இறங்கும் அதற்காக
என்னூரில் கவட்டிடை கம்பு வைத்து
கால் விரித்து வளைந்து குனிந்த
ஔவைக்கு முட்டையிட்ட குட்டி.

வேறொரு பாடல்


திரும்பி பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே
தூரிகை தூற்றிய வண்ணங்களில்
ஒளிந்த அஞ்சி
மயங்கிய ஆத்தா
பாடிய பாட்டே
திரும்பி பாடிய கண நாழியில்
உயிர் தீண்டிய பாட்ட
தூரமிருக்கும் காய் பறித்த பாட்ட
என் பாட்டல்ல
என் கிளவி
அவ கெளவனுக்கு
பாடிய பாட்டு விட்டு
போனால் மீட்டிய பாட்டு
கவலை மீண்ட பாட்டு
நீட்டா வெளி தேசம் சென்ற பாட்டு
பொன்னியின் தாகம் தீர்க்கும் பாட்டு
எத்திசை செல்லினும் அத்திசை ஒலிக்கும் இது
வேறொரு பாடல்
அப்பாடலை நாலு
வளை வண்டுகள் மட்டுமே கேட்டன.

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...