Monday, 11 February 2019

கால நிமிரல்கள்

நிரம்பி வழியும் இரவிடை
சிக்கி விடியும்
நாளைக்கும் நாள்
ஆஅ மேயும்
நாளே ஆகும்
இதனின் கால நிமிரல்களில்
மற்றொரு உடைதரித்து
உடுத்தும் உரிப்பொருள்கள்
இன்றென்றும் பச்சை இழுத்து
போத்தி உறங்கி உதிக்கும்
ஊதை வாடைக்கு நிகரில்
திணை மயக்குறுதலும்
கடிநிலை இலவே யாமே.

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...