மை தீர்ந்த போது நிரப்பிய
நீரோடு மயங்கிய நிற வெளி
நீக்கமர்ந்து பரவிய ஏதோ
ஒன்றின் கீழ்
குமிக்கிய கருவக் காடெங்கும்
ஒன்னுத்தையும் தூக்காமல்
தினமும் முண்டாசு கட்டிட்டு நிற்கும்
கோரையிடம் நானும் உன் இனம் என்று
கொக்கிடம் வாங்கிய உரு உவமை
காட்டி பல்லிளிக்கும் நாணல் நடிக்கும்
ஏழாம் வேற்றுமையில் தொலைந்த
ஒரு உருபில் என் அதே வேற்றுமை.