குவியுலர்
மணலால் கட்டியவனுக்கு
ஐம்
புலன்கள் பொறுக்கியவை
அதில்
காதோறம் வண்ணத்தாள் மின்னியது
வாயை மணல் நொப்பியது
இதில்
கீரிடம் வேற
கொஞ்சமும்
ஒப்பாத ஒன்றினால்
தேடி
கண்ட கிளிஞ்சல்கள் பற்களாயின
பற்கள்
போதவில்லை மீண்டும் பொறுக்கியதில்
உடைந்த
சில்லுகள் மாதிரி கூரெயிரானது
அதிகத்தால்
பல் மீது பல் முளைத்தது
இதுவும்
மாதிரிதான்
கொடுரமானவனை
யிருக்கவிட்டு
அலையும்
கணத்தில் தேடிய பொழுது
புதியதாக
முளைத்த பல் மட்டுமே மிஞ்சியது
இதுவும்
ஔவையார் தாக்கி முட்டி
பின்னே
சொன்ன கொல்லிருந்து.