Sunday, 1 April 2018

போடி கெளவி எம்மனூரும் செம்மலூரே


சிந்தையில் ஆனாது அலைக்கும்
விண்தொட்டு நிவரும் 
சேய் நாட்டு இடைவெளியில் மிதந்து
பிசிறு மிஞ்சிய கணத்தில்
கட்டிவைக்கும் கட்டணம்
ஒன்று ஏற்கனவே செம்மலூரில் மற்று
இன்னும் சில நாழிகளில் இற்று
ஒரு உருவம் காற்றிடை குப்பற தொங்கியது
கால்களையும் கூடவுள்ளவைகளையும்
நிமிர் பார்வையில் பார்க்க முடியல
இப்ப ஆய்வுக் கிளவி வேற
முட்டுவேன் தாக்குவேன் (இரண்டுக்கும் இரண்டு கொல் இருக்கு)
என்கிறாள் போடி கெளவி
எம்மனூரும் செம்மலூரே.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...