Sunday, 1 April 2018

பல் மீது பல் முளைத்தது


குவியுலர் மணலால் கட்டியவனுக்கு
ஐம் புலன்கள் பொறுக்கியவை
அதில் காதோறம் வண்ணத்தாள் மின்னியது
வாயை மணல் நொப்பியது
இதில் கீரிடம் வேற
கொஞ்சமும் ஒப்பாத ஒன்றினால்
தேடி கண்ட கிளிஞ்சல்கள் பற்களாயின
பற்கள் போதவில்லை மீண்டும் பொறுக்கியதில்
உடைந்த சில்லுகள்  மாதிரி கூரெயிரானது
அதிகத்தால் பல் மீது பல்  முளைத்தது
இதுவும் மாதிரிதான்
கொடுரமானவனை யிருக்கவிட்டு
அலையும் கணத்தில் தேடிய பொழுது
புதியதாக முளைத்த பல் மட்டுமே மிஞ்சியது
இதுவும் ஔவையார் தாக்கி முட்டி
பின்னே சொன்ன கொல்லிருந்து.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...