Sunday, 23 September 2018

நீ யாச்சும் போகாதை


சிதறுகின்ற நொடிகளில் வந்தாய்
நீர் சூடியவளின் தலை வழியெங்கும்
அளவின் பெருக்கம் கேட்க
வேண்டும் அருகில் நீ
செலவு அழுங்க சொல்ல
இல்லை தோழி
குறிப்பறிய செவிலி இல்லை
பார்த்து வருந்தும் நற்றாயோ
நாலு காத தூரத்தில்
கண்டு சொல்லும்
கண்டோர் புரியாமையில்
அறம் தேடியே அறிவோர்
ஊடலிடம் பாணன்
நீ யாச்சும் போகாதை யான்.

பேரரசன் பிடியில்


கால இறுக்கத்தில்
காற்றெல்லாம் நொறுங்குகின்றன
இசங்களும் இயங்களும்
சார்பு குடை பிடிக்கின்றன
வெண்ணி கோல்லெடுத்து எழுதிவிட
மொழி காலில் விழுந்தேன்
அ வெடுத்தேன்
ஆஆஆ வென்றது
கவெடுத்தேன்
ங் இடையில் மீளாமல் சிக்கியது
காகா உள்ளிரைச்சல் கொண்டது
வேண்டாம்
புரிந்தது நானும்
அதற்குக் காவாகிப்போனது
ம் மிற்குள் அடங்கி விடுவோம்
என்று நான் என்னும் கொத்தளத்தில் அமர்ந்த
பேரரசன் பிடியில் இன்று ம்

தினங் கண மிதக்கும் கனவாய்


ஈரம் பட்ட தூரல் மாலையில்
திரண்ட ஓர்வுருவம்
வாலையும் வாயையும் தாங்கி
நீர் குடித்து வீங்கி நின்றது
நிதம் யான் அறிவேன்
அதற்கும் இதற்கும்
இருந்தே இருக்கும்
இடைவெளியை
தினங் கண மிதக்கும் கனவாய்
அதிலிருந்து உதிரும் முடிஇ முடிஇ முடிஈ
முடிக்க
கொட்டித் தீர்த்தேனால்
பின் தினம் வெண்புகை
இளைந்து வருகிறது நிரப்ப.

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...