Tuesday, 30 May 2017

கடல் கழுவிய மணல்



கடல் கழுவிய மணலில்
எளைந்த நண்டு
கொஞ்சம் நறைய
எளைந்து எளைந்ததில்
வளை ஆழமாகி
கீழடியில் சிக்கியது
ஏறத்தெரியாமல் ஏறி
மாட்டின் மீது ஏறியது.

Wednesday, 24 May 2017

கோழி முட்டையிட மறந்தது.



ஆற்றில் வெள்ளம் பொங்கி
வாய்க்கால் வரப்பினைத் தாண்டி
கன்னிக்குள் செல்ல மறுத்த  பொழுது
தலைவன் அல்லல் குறிப்பட்டு திரும்பி
போனதை ஆக்காட்டி குருவி கூச்சல்
கூறியதைத் துறந்து கனவுக் கண்ட
கோழி முட்டையிட மறந்தது.

Thursday, 18 May 2017

கால்(கை) விட்ட அறம்



அறத்தோடு நின்று நின்று
தோழிக்குக் கால் வலித்தது
கால்(கை) விட்ட  அறம்
வெடுப்பிற்குள் நட்டு வைத்த
நாற்றின் இல்லாத நுனியில்
நின்று ஆடியது.

Tuesday, 16 May 2017

கானல் வீரர்களின் பெருங்கூட்டம்.



முருங்கை கீரை உருகும் பொழுது
காம்புகளுக்கிடையிலும்
விரல்களுக்கிடையிலும்
ஏதோ பொங்கியது
ஒடிந்த முருங்கை காய்க்கு
முட்டுக்கொடுக்க
கானல் வீரர்களின் பெருங்கூட்டம்.

Monday, 15 May 2017

ஆடதொட தொடும்



ஊமத்தம் பூ பார்த்து
தும்பை பூ பல்லிளித்தது
குறை நயபித்த
ஆடதொட தொடும்
கானாக் கண்டு வந்த வழி பார்த்து நின்றது.

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...