கசக்கிய கருவிழிகள்
சிதைந்த பச்சையுடல்
வெந்து கறுத்த பாலிதல்
உள்ளும் பொழுதெல்லாம்
கருவிழிகள் ஈட்டியாக
உடல் தழலாக
இதழ் நறுக்கும் கோலாக
அந்நாழி இருந்திருந்தால்
இன்று சுட்டிச்சொல்ல
என் மொழியில்
வார்த்தையில்லாத
ஏதோ ஒன்றுகளே
இந்நேரம் அந்தொன்றுகள்
காட்சியாயிருக்கும்
ஊடகங்களுக்கு.
No comments:
Post a Comment