ஓர்யான்
துஞ்சாது விடுகையில் பதினைந்தாம்
நாழிகையை
இறுதிக் கொண்ட இடையிரவு
நீட்டான
கானல் கனவில்
பிசிரும்
நீர்த்துளியால் நிலம்
விம்மி
புடைத்து மேலெழும்பி முட்டி
குவிமுகிழ்
எருக்கென
துளை
காட்டி நிற்கும் நேரம்
மழை
பெய்யா நின்றது
இதெழுத முண்டாசு கவிஞனின்
மூக்கின்மீது
வைத்து தீட்ட
எடுத்த
கோல் அதன் தொழில் மறந்து
விழிப்பில்
இது காரல்ல ஏனெனில்
வானமெல்லாம்
வெயில் செய்கின்றன.
No comments:
Post a Comment