Sunday, 1 December 2019

மறைநீர்க் குடித்த ஒளிக்குஞ்சுகள்

அடங்கா தூர முட்டையை
யிருமையிருள் படரந்தி விழுங்க
இடையிருந்த தொல்லிடம்
எங்கும் ஒளிப்புள்ளிகள்
பதுங்கல்களை எட்டி நின்று
பார்க்கும் பொழுதே
மறைநீர்க் குடித்த ஒளிக்குஞ்சுகள்
வானம் மேவியது
ஆக்கம் எல்லாம் வெளிச்சக்
கதகதப்பில் முதல் சூடு கேட்க
வயல் புகுந்த  வெளிச்சமது
நிழலும் வெளிர்ந்து
ஏதோவொன்றின்
உச்சியிலிருந்து வழிவது
தொடர்க்கூத்தாம்.


No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...