எப்போழுதும்
உன்
நினைவு
ஊருவதை
நெளிவதை ஓடுவதை
உணர்கிறேன்
அரிக்கிறாய்
சொரிய வைக்கிறாய்
தடிக்கச்செய்கிறாய்
முதுகில்
இருக்கும் ஆயுதத்தைக் காட்டி
நடுங்க
வைக்கிறாய்
பத்தையாய்ப்
பற்றி பதறச்செய்கிறாய்
நெளிந்து
நெளிந்து நெளிய வைக்கிறாய்
ஸ்பைடர்
மேன் போல தொங்கும்
நீ
இனக்குழுவா இருந்துட்டு போ
உன்னை
அழிக்கும் பேரரசு
உருவாக்கத்தின்
பேரரசி
என்
தாய்.
No comments:
Post a Comment