இயற்கையும் கடலும் எம்மவர்களுடன்
குழுமி
பிணைந்ததில் யம்மவர்களில் சிலர்
நைந்து
பிய்ந்து காய்ந்து காணாமல் போனார்கள்
நானும் மாலைப்பொழுதில் வானையும்
கடலையும் நோக்கி நின்றேன்
இம் மேடை மிசையே
உன் முன் சிரித்தவை
என்முன் நமட்டி நகைக்கிறது
மௌனம் தின்று தின்று
திகட்டும் தருணத்தில்
முண்டாசு கேடயம் மீசை ஈட்டி தா
நானும் மீட்ட வேண்டும்.
No comments:
Post a Comment