கரை
புரண்ட வெள்ளம்
ஓஒவென
ஓடிற்று
ஓசை
கேட்டு புரண்ட புழுதி
படுக்க
காத்திருந்த விதைகள்
வீசிய
வேகத்தில்
சில
குத்தி நின்றன
பல
படுத்தன
குத்தியவையப்
புறவினங்கள்
கொத்தின
முன்னிடை
நீலநெருக்கடியில்
கலந்த
மலடு
தோன்றச் செய்யும்
ஒரு
வெளியேற்றம்
பின்னிடை
கருப்பேந்திய
சூலை
பதிவிறக்கும்
பனிக்குட
உடைப்பு
கனவு
கண்டே இருக்கின்றன
ஆனிடை
படுத்திருப்பவை.
No comments:
Post a Comment