Thursday, 11 May 2017

ஐய்ய் ஐய்ய் யோஒ உடல் இடிபாடுகளுக்குள்



கண்ணை இடித்தேன்
மூக்கு குட்டையானது
மூக்கை இடித்தேன்
வாய் கோணலானது
வாயையும் இடித்தேன்
காதும் தலையும்
திருகியும் திருப்பியும் போயின
சரியென்று சரிசெய்தேன்
சரியாக இருந்த கையும் காலும்
நீட்டமும் குள்ளமாக மாறின
ஐய்ய் ஐய்ய் யோஒ
உடல் இடிபாடுகளுக்குள்
செய்வது அறியேன்
திரும்ப திரும்ப இடிவதால்
ஒட்ட வைப்பதில் சோர்வடைகிறேன்.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...