ஔவையார் ஓட்டிய
வண்டியின் நேமி கழண்டு
யார் மட்டுமே எஞ்சியது
இடையில் தலைவன் தலைவி
எங்கிருந்து வந்தார்கள் யோசிக்கையில்
திமில் கொண்ட கூட வால்
கொம்பு வயிறு வாய்
இன்னும் சிலவும் பெற்ற
இரு காளைகளுக்கிடையில்
பயணம் செய்யும் நோத்தடி
ஏசி பிரனின் வாகனத்தை
நினைவூட்டியது.
No comments:
Post a Comment