Sunday, 5 July 2020

வீழ்வெப்ப துளிர்தல் சற்றைகளில்
நிகழ்த்தும் கண்காணிப்பு சுழற்சி நடுவே
கிழக்கு தின்ற பகல் மீளவும்
மேற்கை உள்ளுருட்டி பதுக்குகிறது

முன்னிலை

இயல்பாக கடந்து போகும்
எழுத்துகளின் பின்னால் நகரும்
நகக்கண் பார்வையும் கேட்டல்
வளைவில் நின்ற சத்தமும் 
துண்டித்தலுக்கு பிறகும் எளிதல்ல

தனிநிலை

நதி முதல் நதி வரை தொல் கதைகள்
குறுக்கால வைக்கும் கோல் ஊடால
அந்தப் பக்கமும் தெரிகிறது
இந்தப் பக்கத்திலிருந்து.


No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...